மகராஷ்ட்ராவின் வீரர் ஸ்வப்நில் தோபடே தனி முன்னிலை பெற்றார்.

மகராஷ்ட்ராவின் வீரர் ஸ்வப்நில் தோபடே தனி முன்னிலை பெற்றார்.

Swapnil-S-Dhopade“A” பிரிவு கிராண்ட் மாஸ்டர் போட்டியில் ஐந்தாவது சுற்று முடிவுகள்
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ரத்னாகரன் தனது சக வீரர் ஸ்வப்னில் தோபடேயுடன் வெள்ளை நிறக்காய்களுடன் மோதினார். காரோகான் முறை ஆட்டதில், 46 வது நகர்த்தலில் தனது ராணியை பறிகொடுத்த ரத்னாகரன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
5 புள்ளிகள் பெற்ற ஸ்வப்னில் தனி முன்னிலை பெற்றார்
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நாராயணன் ரஷ்யாவின் பொபோவ் இவானுடன் ஆரம்பம் முதல் விட்டுக்கொடுக்காமல் ஆடினார். இருவருமே சமபலத்துடன் வெற்றிக்கு வாய்ப்பில்லை என 39 வது நகர்த்தலில் டிரா செய்து கொண்டனர்.

ரத்னாகரன் 4 தோல்வி ஸ்வப்நில் தோபடே 5

நாராயணன் 4 டிரா பொபோவ் இவான் [ரஷ்யா] 4

காக்ரே ஷர்துல் 3.5 தோல்வி மொரோவ் மிகைல்[ரஷ்யா] 4.5

கிருஸ் கிறிஸ்தியன் [பெரு] 4 டிரா கார்த்திகேயன் 4

துமாவ் மராட் [உஸ்பெகிஸ்தான்] 4.5 வெற்றி ராம்நாத் புவனேஷ் 3.5