ஏழு வீரர்கள் ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

ஏழு வீரர்கள் ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
இன்னும் ஒரு சுற்று மட்டுமே உள்ள நிலையில் ஏழு வீரர்கள் ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள இறுதி சுற்றின் முடிவில் பட்டம் யாருக்கு என்பது தெரியவரும்

இந்தபோட்டியின் இன்றைய சிறப்பம்சம் தமிழக வீரர் ராம்நாத் புவனேஷ் இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் பட்டயம் [NORM] பெற்றுள்ளார்.

இவர் இதே போன்றதொரு போட்டியில் கலந்துகொண்டு இன்னும் சில கிராண்ட் மாஸ்டர்களுடன் ஆடி மூன்றாவது பட்டயம் பெரும் பட்சத்தில் இவருக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும்.

சில முக்கிய முடிவுகள் :
துமோவ் மராட் [உஸ்பெகிஸ்தான்] 7 டிரா மோராவ் மிகைல் [ரஷியா 7
ஸ்வப்னில் தோபடே [இந்தியா] 7 டிரா ராம்நாத் புவனேஷ் [இந்தியா] 7
கிருஸ் க்றிஸ்தியான்[பெரு] 6.5 டிரா பொபோவ் இவான் [ரஷ்யா] 7
கிருஸ் ஜோனாதன் [பெரு] 6 தோல்வி கசநோவ் எல்டர் [உக்ரைன்] 7
சித்தார்த்[இந்தியா] 7 வெற்றி தீபன் சக்கரவர்த்தி[இந்தியா] 6
ஸ்டானி [இந்தியா] 5.5 தோல்வி ப்ருனல்லோ சபினோ[இத்தாலி] 6.5