இருவர் முன்னிலை

“A” பிரிவு கிராண்ட் மாஸ்டர் போட்டியில் ஆறாவது சுற்று முடிவுகள்
இந்தியாவின் ஸ்வப்னிலும், ரஷ்யாவின் மோரோவ் மிகைளும் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர்.
Swapnil-S-Dhopade

GM Mozharov
GM Mozharov

இந்தியாவின் ஸ்வப்னில் ,உஸ்பெகிஸ்தானின் துமாவ் மராட் மோதிய ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இருவரம் பரஸ்பரம் காய்களை வெட்டியும் வேட்டுக்கொடுத்தும் சம பலத்துடன் ஆடினர். 51 வது நகர்த்தலின்போது இருவரிடமும் தலா மூன்று சிப்பாய்கள் மட்டுமே இருந்தநிலையில் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யாவின் பொபோவ் இயான் அதிரடியான தாக்குதல் நடத்தினார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாத இந்தியாவின் சயந்தன் தாஸ் 29 வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதுபோன்றே இத்தாலியின் சபினோ ப்ருனல்லோவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கமுடியாத இந்தியாவின் நாராயணன் 27வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார்.