இந்திய வீரர் ஸ்வப்னில் தொடர்ந்து முன்னிலை

இந்திய வீரர் ஸ்வப்னில் தொடர்ந்து முன்னிலை
Grandmaster-elect-Swapnil-S-Dhopadeஇந்திய இரயில்வேயில் பணிபுரியும் ஸ்வப்னில் தோபடே 6.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

வெள்ளை நிறக்காய்களுடன் ஆடிய ஸ்வப்னில் ரஷ்யாவின் மோரோவ் மிகைலை தனது ஆட்டத்தினால் ஆரம்பம் முதலே திணறஅடித்தார். ராணிக்கு ராணி யானைக்கு யானை வெட்டபட்டன.

இருவரிடமும் தலா நான்கு சிப்பாய்கள் இருந்த நிலையில் ஸ்வப்னில் தனது பிஷப்பை மிக சாதுர்யமாக நகர்த்தி ரஷ்ய வீரரின் இரண்டு சிப்பாய்களைக் கைப்பற்றினார்.

வெற்றியும் கிடைக்காது, டிராவும் முடியாது என்கிற சூழ்நிலையில் ரஷ்யவீரர் மிகைல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

பெரு நாட்டின் குருஸ் ஜோனாதன் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் ,உஸ்பெகிஸ்தானின் மாராட்,ரஷ்யாவின் பொபோவ் ,பெரு வின் க்ருஸ், ரஷ்யாவின் மிகைல் உக்ரைனின் எல்டார் ,இவர்களுடன் இந்தியாவின் ராம்நாத் புவநேஷும் கார்த்திகேயன் முரளியும் 5.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

சில முக்கிய முடிவுகள்:

ஸ்வப்னில் தோபடே [இந்தியா] 6.5 வெற்றி மோரோவ் மிகைல் [ரஷியா] 5.5

துமேவ் மராட் [உஸ்பெகிஸ்தான்] 5.5 டிரா பொபோவ் இவான் [ரஷியா] 5.5

குருஸ் ஜோனாதன் [பெரு] 6 ப்ருனல்லோ சபினோ [இத்தாலி] 5

கார்த்திகேயன் முரளி [இந்தியா] 5.5 வெற்றி கார்த்திகேயன் [இந்தியா] 5

க்ருஸ் கிறிஸ்தியன் [பெரு] 5.5 வெற்றி ரவிதேஜா [இந்தியா] 4.5